1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ல் வா‌க்கெடு‌ப்புட‌ன் ‌விவாத‌ம்: அ.இ.அ.‌தி.மு.க. கோ‌ரி‌க்கை!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அ.இ.அ.தி.மு.க.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்று அ.இ.அ.தி.மு.க ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அளித்துள்ளது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இம்மாதம் 19, 20 ஆ‌கிய தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சனையில் விதி 168ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநிலங்களவையில் ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகு‌‌றி‌த்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்