1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காங். காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

கா‌ங்‌கிர‌ஸ் காரியக் கமிட்டி டெல்லியில் முதன் முறையாக ராகுல் காந்தி
டெல்லியில் நடந்த கா‌ங்‌கிர‌ஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதன் முறையாக கலந்து கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி முதன்முறையாக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி, அமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ் ஆகியோர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முறையான அனுமதி பெற்று, பின்னர் நடைமுறைபடுத்தப்படும்.

இந்த கூட்டத்தில், சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி முதன் முறையாக கலந்துகொண்டு சில ஆக்கப்பூர்வமான திருத்தங்கள் பற்றி வலியுறுத்தினார். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்படும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூறினர்.