1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சிறை‌க்கு‌ள் சுர‌ங்க‌‌ம்: உ.‌பி.‌யி‌ல் பரபர‌ப்பு!

‌சிறை சுர‌ங்க‌‌ம் உ‌த்தர‌‌ப்பிரதேசம் மீரட்
உ‌த்தர‌‌ப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள மத்திய சிறையில் 40 அடி நீளமுள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பரபர‌‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மீரட் நகரில் உள்ள மத்திய சிறைக்குள் 40 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறையின் 17 மற்றும் 18வது அறைப் பகுதியில் இந்த சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது.

சிறைக் கண்காணிப்பாளர் நட‌த்‌திய ஆய்வின்போது இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறையிலிருந்து தப்புவதற்காக கைதிகள் இந்த சுரங்கத்தைத் தோண்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து சிறைக் கைதிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கா‌வ‌ல்துறை மற்றும் சிறை‌த்துறை உய‌ரதிகாரிகள் அந்த சுரங்கத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மீரட் சிறையில் பெரிய அளவில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.