1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர்

ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர்
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்றோ அல்லது நாளையோ மாநில ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து, சட்டப்பேரவையில் தனது ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பளிக்குமாறு கேட்க இருப்பதாகக் கூறினார்.

மதசா‌ர்ப‌ற்ற ஜனதாதளக் கட்சியின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அரசியலில் தற்போதைய நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே ஆளுநரை சந்திப்பது என்று முடிவு செய்தோம் என்று கூறினார்.