1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குமாரசா‌மி அர‌சி‌ற்கு ஆதரவு? கா‌ங்‌கிரஸ் மெளன‌ம்!

குமாரசா‌மி க‌ர்நாடகா காங்கிரஸ் பாஜக
க‌ர்நாடக‌த்‌தி‌ல் முத‌ல்வ‌ர் குமாரசா‌மி தலைமை‌யிலான ஆளு‌ம் மதசா‌ர்ப‌ற்ற ஜனதாதள‌க் க‌ட்‌சி‌க்கு ஆதரவ‌ளி‌‌ப்பது தொட‌ர்பாக கா‌ங்‌கிரசு மெளன‌ம் கா‌த்து வரு‌கிறது.

இதுபற்றி டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டபோது, கர்நாடக மாநில அரசியல் நிலைமை எதிர்பாராத, வெளிப்படையற்ற தன்மையை அடைந்திருப்பதாகவு‌ம், ம.ஜ.த. - பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு வாக்களித்த மக்கள், ஊழல், மோசமான ஆட்சியால் அதிருப்தி‌யி‌ல் உ‌ள்ளதாகவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க தயாராகி விட்டதாகவும், உரிய நேரத்தில் தகுந்த முடிவை காங்கிரஸ் எடுக்கும் என்றும் அவர் கூறினார். 18-ஆ‌ம் தே‌தி ச‌ட்ட‌ப் பேரவை‌க் கூ‌ட்ட‌‌ம் நடைபெறவு‌ள்ளது தொட‌ர்பாக அவ‌ர் எதையு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 48 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 60 உறுப்பினர்கள் உள்ளனர்.