பிரதமர் நாளை வீடு திரும்புகிறார்!
அறுவை சிகிச்சைக்குப்பிறகு உடல்நலம் தேறிவரும் பிரதமர் மன்மோகன் சிங் நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்!
டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த சனிக்கிழமை குடலிறக்கத்திற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவரின் உடல்நலம் தேறிவருவதாக, மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீகாந்த் ரெட்டி கூறியுள்ளார்.
''அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டிய சோதனைகள் எல்லாம் முடிந்தபிறகு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இருந்து பிரதமர் நாளை வீடு திரும்புவார்'' என்று ரெட்டி தெரிவித்தார்,
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என். குப்தா தலைமையிலான மருத்துவர்கள் பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.