1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : சந்தேகிக்கப்படும் நபரின் படம் வெளியீடு!

ஹைதராபாத் குண்டு வெடிப்பு கணினி வரைபடம்
PTI PhotoPTI
44 பேர் பலியாகக் காரணமான ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபரின் கணினி வரைபடத்தை ஆந்திர மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது!

இன்று இப்புகைப்படத்தை வெளியிட்ட ஹைதராபாத் மாநகர காவல்துறை, லும்பினி பூங்காவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இந்த நபருக்கு 25 வயது இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த நபர் கறுப்பு நிற பையுடன் அந்தப் பூங்காவில் இருந்ததாக நேரில் பார்த்தவர் தெரிவித்த அடையாளங்களை வைத்து அந்த நபரின் உருவத்தை கணினியில் உருவாக்கியதாகவும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.