1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கோவா : குடியரசுத் தலைவரை சந்திக்க பாஜக முடிவு

கோவா காங்கிரஸ் கூட்டணி
கோவா பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தங்கள் அணி ஆதரவாளர்கள் அடங்கிய பட்டியலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்தித்து தர உள்ளார். முன்னதாக ஆதரவு உறுப்பினர்களுடம் கோவாவில் பாஜக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.

கோவா மாநில காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை மகாராஷ்டிர வாடி கோமந்த் கட்சியின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஒரு சுயேட்சையும் விலக்கிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் மாற்று அரசு ஆட்சி அமைக்க அழைப்பு விடுமாறு அம்மாநில ஆளுநரை நேற்று சந்தித்து பாஜக கூட்டணி கேட்டுக் கொண்டது. இதனிடையே இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து தங்கள் கூட்டணி ஆதரவாளர்கள் பட்டியலை தர பாஜக முடிவு செய்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பாஜக தலைமையிலான கோவா ஜனநாயக கூட்ட்ணி தனது ஆதரவாளர்களுடன் கோவாவில் இன்று பேரணி நடத்துகிறது.