1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜெயலலிதா மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மீது வழக்கு தேர்தல் ஆணையம்
சட்ட மன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது சட்டவிரோதமானது என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடர மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
About Writer
Webdunia