1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பீகாரில் நக்சலைட் தாக்குதல்: 7 காவலர்கள் உள்பட 11 பேர் பலி

பீகாரில் நக்சலைட் தாக்குதல் 11 பேர் பலி
பீகாரில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 காவலர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த 200 பேர் கொண்ட நக்சலைட் கும்பல், திடீர் தாக்குதல் நடத்தியது. அப்போது காவல் துறையினருக்கும், நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 7 காவலர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ரோடாஸ் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.ஹான் தெரிவித்தார். காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை நக்சலைட்டுகள் கொள்ளையடித்து சென்றதாகவும் அவர் கூறினார்.

இதேபோல் ரோடாஸ் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
About Writer
Webdunia