1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அஸ்ஸாமில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு : இருவர் பலி!

அஸ்ஸாம் குண்டு வெடிப்பு
அஸ்ஸாம் மாநிலம் டின்சுக்கியா மாவட்டத்தில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமுற்றனர்!

டின்சுக்கியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பிரஷர் குக்கரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு 5.01 மணிக்கு வெடித்ததாகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமுற்றனர் என்றும் அஸ்ஸாம் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு குண்டு டெய்லி பஜார் என்ற இடத்தில் 5.05 மணிக்கு வெடித்ததாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டும், மேலும் 15 பேர் காயமுற்றதாகவும், 3வது குண்டு தூம்தூமா நகரில் உள்ள திரையரங்கில் வெடித்ததாகவும், அதில் 10 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமுற்றவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் திப்ருகாரில் உள்ள அஸ்ஸாம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
About Writer
Webdunia