1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சோனியாவுடன் பிரதீபா பாட்டீல் இன்று சந்திப்பு

பிரதீபா பாட்டீல் சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பதவிக்காலம் அடுத்த மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவருக்கனான தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் இன்று டெல்லி செல்கிறார். அங்கு அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேசுகிறார்.

About Writer
Webdunia