1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காஷ்மீரில் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 2 பேர் பலி!

பாரமுல்லா மாவட்டம் தாக்குதல் வீரர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவனத்தினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நான்கு பேர் உட்பட 8 பேர் காயமுற்றனர்.

பாரமுல்லா மாவட்டம் சோப்போர் என்ற இடத்திற்கு அருகே இத்தாக்குதல் நடந்ததாக கூறிய இந்திய ராணுவ பேச்சாளர், காயமுற்றவர்களில் 3 பேர் ராணுவ வீரர்கள், ஒருவர் மத்திய கூடுதல் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர், நான்கு பேர் அப்பாவிகள் என்று கூறினார்.

இத்தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
About Writer
Webdunia