1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குவஹாத்தியில் குண்டு வெடித்தது: 7 பேர் பலி

குவஹாத்தி குண்டு வெடிப்பு
அசாம் மாநிலம் குவஹாத்தி நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்

குவஹாத்தி நகரில் உள்ள ஆத்கோவான் என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனை உல்ஃபா பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்கக் கூடும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குண்டு வெடித்த நகரின் வாயில்கள் அடைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia