வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறும் கொடை நாடுகள், இப்படிப்பட்ட முயற்சியின் மூலம் தமிழர்களை இன ரீதியாக ஒழித்துவரும் சிங்கள இன வெறி அரசை அதன் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றவே முற்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கூறியுள்ளார்.