கொழும்பு : தங்களுக்கு எதிரான இனப் படுகொலையை யார் செய்கிறார்களோ அவர்களின் கைகளில் தமிழ் மக்கள் தங்களின் விதியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு ஐ.நா. அமைதியாக உதவுகிறது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம்சாற்றியுள்ளார்.