கொழும்பு: சிறிலங்கப் படையினரின் தொடர் எறிகணை, வான்வழித் தாக்குதல்களால் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ஏராளமானவர்களில் இளைஞர்கள், பெண்களை குறிவைத்து கடத்தும் அந்நாட்டுப் புலனாய்வுத்துறை அவர்களை கொலை செய்து வருவதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.