வாஷிங்டன்: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கரான நீல் குமார் கத்யாலை அமெரிக்காவின் துணை தலைமை வழக்கறிஞராக பராக் ஒபாமா நியமித்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டு நீதித்துறையின் 2வது இடத்திற்கு நீல் குமார் கத்யால் உயர்த்தப்பட்டுள்ளார்.