காட்மாண்டு: நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலுக்குள் தாங்கள் நியமித்த அர்ச்சகருடன் மாவோயிஸ்ட் தொண்டர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ஏராளமான கலவரத் தடுப்பு காவல்துறையினரை அந்நாட்டு அரசு கோயிலில் குவித்துள்ளது.