கொழும்பு: சிறிலங்காவின் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் லக்பிம வார இதழிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் பேட்டி எதையும் வழங்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்ததாக புதினம் இணைய தளம் கூறுகிறது.