ஐக்கிய நாடுகள்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் லஸ்கர் ஈ தயீபா அமைப்பின் துணை அமைப்பான ஜமாத்- உத் தவா அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான், ஐ.நா. பாதுகாப்பு அவை கேட்டுக்கொள்ளுமானால் அவ்வமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யத் தயார் என்று உறுதியளித்துள்ளது.