தோஹா: பிரதமர் மன்மோகன் சிங்கின் வளைகுடா நாடுகள் பயணத்தின் போது, கத்தார் நாட்டுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும், ஓமன் நாட்டுடன் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வழிவகுக்கும் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன.