வாஷிங்டன் : இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகுக்கும் 123 ஒப்பந்த வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டு சட்டமாகிவிட்ட நிலையில், அதில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நாளை கையெழுத்திடுகின்றனர்.