கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செப்டம்பர் மாதத்தில் நடந்த மோதல்களில் மட்டும் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,000 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கப் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.