வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு தடையற்ற அணு (யுரேனியம்) எரிபொருள் வினியோகம் செய்யப்படும் என்றும், இதில் இடையூறு ஏற்பட்டால் அதனை சீர்செய்ய அமெரிக்க அரசு தேவையான முயற்சிகளை எடுக்கும் என்றும் அந்நாட்டு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.