பீஜிங்: இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பீஜிங்கில் ஓராண்டுக்குப் பிறகு இன்று துவங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இந்திய அதிகாரிகள் குழுவுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமை தாங்குகிறார்.