இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரிக்கு நெருங்கிய நண்பரும், அரசியல்வாதியுமான அப்துல்லா ஹுசைன் ஹாரூன் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பு வகித்து வந்த முனிர் அக்ரம் என்பவருக்குப் பதிலாக இவர் அப்பொறுப்பேற்றுள்ளார்.