பாகிஸ்தான்: காவல் துறை சோதனை சாவடியில் குண்டு வெடித்து 10 பேர் பலி!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள காவல் துறை சோதனை சாவடியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் காவல் துறையினர் 5 பேர் உள்பட 10 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பெஷாவரின் படாபெர் பகுதியில் உள்ள இந்த காவல் துறை சோதனைச் சாவடி குண்டு வெடிப்பில் இடிந்து விழுந்தது. மேலும், மார்க்கெட்டுக்கு அருகிலுள்ள இரண்டு கட்டடங்களும், 15 வாகனங்களும் சேதமடைந்தன.
சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல்கள் 50 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வரும் வேளையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.