வாஷிங்டன்: அணு ஆயுதச் சோதனையில் சுயகட்டுப்பாட்டை முழுமையாகப் பின்பற்றுவோம் என இந்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதற்கு நடத்தப்பட்டு வரும் என்.எஸ்.ஜி (NSG) உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.