வாஷிங்டன்: கரீபியன் கடலில் உருவான ‘குஸ்தவ்’ சூறாவளி மெக்ஸிகோ வளைகுடா பகுதியை இன்று அடைந்ததைத் தொடர்ந்து, நியூ ஆர்லியான்ஸ் நகரிலும் கனமழை துவங்கியுள்ளது. சூறாவளியின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் நியூ ஆர்லியான்ஸ் மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.