1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாகிஸ்தான்: மக்கள் கட்சி-முஸ்லிம் லீக் பிளவு பெரிதாகிறது!

பாகிஸ்தான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் மக்கள் கட்சி பர்வேஷ் முஷாரஃப் ஆசிஃப் அலி சர்தாரி நவாஸ் ஷெரிஃப்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலையடுத்து ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், அதற்கு ஆதரவு அளித்துவந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பிளவு அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரஃப் விலகியதை அடுத்து அந்நாட்டு அதிபர் பதவிக்கு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட பா.ம.க. தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவருமான ஆசிஃப் அலி சர்தாரி மனு தாக்கல் செய்தததையடுத்து ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த 25ஆம் தேதி பாக். முஸ்லீம் லீக் கட்சி விலக்கிக் கொண்டது. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிஃப் அலி சர்தாரி, பா.மு.லீ. கட்சித் தலைவர் நவாஸ் ஷெரிஃபுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். இந்தப் பேச்சில் உடன்பாடு ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.
ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துவருவதாக பாகிஸ்தான் செய்திகள் கூறுகின்றன.
About Writer
Webdunia