1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

துபாயில் தீ விபத்து: 10 இந்தியர்கள் பலி!

துபாய் தெய்ரா 10 இந்தியர்கள் பலி
துபாயின் தெய்ரா பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 இந்தியர்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து நேற்றிரவு தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து துபாய் தூதரக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூதரக அதிகாரிகள் விபத்துப் பகுதியை பார்வையிட்டு வருவதாகவும், பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடப்பதாக தெரிவித்தார்.
About Writer
Webdunia