மாஸ்கோ: அமைதியை உருவாக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ஜார்ஜியா மீது கடந்த 5 நாட்களாக நடத்திய தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். ஜார்ஜியா மோதலுக்கு ஒரு வகையில் அமெரிக்காவும் காரணம் என்றும் ரஷ்யா குற்றம்சாற்றியுள்ளது.