1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌விய‌ட்நா‌ம் வெ‌ள்ள‌த்‌தி‌ல் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 116 ஆக உய‌ர்வு!

விய‌ட்நா‌ம் வெ‌ள்ள‌ம் நில‌ச்ச‌ரி‌வு‌ லாகோ‌ய்
விய‌ட்நா‌ம் நாட‌்டி‌ல் ஏ‌ற்ப‌ட்ட வெ‌ள்ள‌‌த்‌தி‌ல் ‌சி‌‌க்‌‌கி ப‌லியானோ‌ர் எ‌ண்‌‌ணி‌க்கை 116 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

வட‌க்கு ‌விய‌ட்நா‌ம் பகு‌தி‌யி‌ல் வெ‌ள்ள‌ம், ‌நில‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி காணாம‌ல் போனவ‌ர்க‌ளை தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் ராணுவ ‌வீர‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர். காணாம‌ல் போனதாக ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ள 42 பே‌ரை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் பண‌ி‌யை அவ‌ர்க‌ள் மே‌ற்கொ‌ண்டன‌ர்.

வெ‌ள்ள‌த்தா‌ல் ‌மிகவு‌ம் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட லாகோ‌ய் மாகாண‌த்‌தி‌ல் இரு‌ந்து ப‌லியான 11 பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் ‌நே‌ற்று மீ‌ட்க‌ப்ப‌ட்டன‌. இதனா‌ல் அ‌ங்கு ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 48 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. அரு‌கிலு‌ள்ள யெ‌ன்பே‌யி மாகாண‌த்‌தி‌ல் 34 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள் எ‌ன்று பே‌ரிட‌ர் ‌‌மீ‌ட்பு குழு அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல் வெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 116 ஆக உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌‌ன்னு‌ம் ‌தி‌க்க‌ற்ற ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள 3 மாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌ல், ராணுவ ஹெ‌லிகா‌‌ப்ட‌ர்க‌ள் வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்களுக்கு உணவு பொ‌ட்டல‌ங்க‌ள், த‌ண்‌‌ணீ‌ர் வழ‌ங்கு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.