ஈராக்கில் கார் குண்டு வெடித்து 21 பேர் பலி!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்ததில் 21 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
வடக்குப் பகுதியில் தல் அஃபார் நகரில் உள்ள காய்கறி சந்தையில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.
இதில் சந்தைக்கு காய்கறி, பழங்கள் வாங்க வந்திருந்தவர்கள், வணிகர்கள் உள்பட 21 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே ரத்தக்காடாக மாறியது.
இந்த தாக்குதல் நடந்துள்ளதை அமெரிக்கா ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால் தங்களுக்கு கிடைத்த முதல் கட்ட தகவலின் படி 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.