பெஷாவர்: பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள தீவிரவாதிகளை உடனே விடுவிக்கவில்லை என்றால் கடத்தி வைக்கப்பட்டுள்ள 29 பாதுகாப்பு படை வீரர்களையும் இன்று பிற்பகல் முதல் ஒவ்வொருவரையாக கொலை செய்து விடுவதாக தெஹ்ரிக்- இ- தாலிபான் பாகிஸ்தான் (TTP) தலைவர் பைதுல்லா மெசூத் மிரட்டல் கெடு விடுத்துள்ளார்.