இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல்: பாகிஸ்தான் கண்டனம்!
ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களும் மனித நேயத்திற்கு எதிரானவை என்பதுடன் ஆபத்தானவையும் ஆகும் என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களையும் பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிப்பதுடன், அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ள இந்தியர்கள் 4 பேர் உள்ளிட்ட 41 பேரின் குடும்பங்களுக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.