சாம் மானக்ஷாவிற்கு ஒபாமா இரங்கல்!
மறைந்த இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷாவிற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பாரக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷாவை இழந்து நிற்கும் இந்தியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் சிறந்த தேசபக்தர், மிகச் சிறந்த போராளி, குடிமக்களுக்கு ஊக்கமளிப்பவர்" என்று ஒபாமா தனது செய்தியில் கூறியுள்ளார்.
வீரம், தன்னலற்ற தியாகம் ஆகியவற்றுக்கு உதாரணமாக இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணியாற்றிய மானக்ஷா திகழ்ந்தார் என்று ஒபாமா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.