ஈராக்: தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் பலி!
ஈராக்கில் பெண் மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மத்திய ஈராக்கில் உள்ள பகுபாவில் தியால மாகாண ஆளுநரின் தலைமையக வாயில் அருகில் உள்ள காவலர்களைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 8 காவலர்கள், 2 பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த காவல்துறை வாகனங்களும், பொது மக்களின் கடைகளும் கடுமையாகச் சேதமடைந்தன.