ஆஃப்கன் தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் பலி!
வடக்கு ஆஃப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கெரெஸ்க் என்ற இடத்தில் சர்வதேசப் படையினரின் அணிவகுப்பைக் குறிவைத்து தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக ஹெல்மாண்ட் மாகாண காவல் அதிகாரி முகமது ஹூசைன் அண்டிவால் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் இரண்டு கடை உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதுன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், படையினர் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.