பீஜிங்: தெற்கு சீன பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்திற்கு குறைந்தது 62 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.