பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!
பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
வடமேற்கு எல்லை மாகாணமானத் தலைநகரான பெஷாவரில் காவலர்கள் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்கச்செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். வாகனம் முழுதும் சேதமடைந்தது.
இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் இந்த மூவரின் உடல் நிலை கவலைக்கிடம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றொரு குண்டுவெடிப்பு பாகிஸ்தான்- ஆப்கான் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது. பழங்குடியினர் பகுதியான பராவில் உள்ள மருத்துவமனை அருகே கார் குண்டு வெடித்தது இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.