1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

வங்கதேச பேருந்து விபத்தில் 18 பலி!

தங்கெய்ல் பேருந்து விபத்து டாக்கா
வங்கதேச மலைப் பகுதியில் வேகமாகச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து சாலையை விட்டு இறங்கி உருண்டது. இதில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

வங்கதேச வடக்கு மாவட்டமான குரிகிராமிலிருந்து இன்று தினக்கூலி வேலையாட்களை ஏற்றிக்கொண்டு டாக்கா நோக்கி இந்த பேருந்து வந்து கொண்டிருக்கும்போது தங்கெய்லமாவட்டமஅருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

பேருந்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டதால் ஓட்டுனர் கட்டுப்பாடு இழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

காயமடைந்த 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுவரை 16 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளஎன்றும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றும் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
About Writer
Webdunia