ஈராக் கார் குண்டுவெடிப்பில் 30 பேர் பலி!
ஈராக் பக்குபா நகரத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பக்குபா நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கியச் சாலையில் உணவகம் ஒன்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று வெடித்துச் சிதறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் 30 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டதாகத் தெரிவித்த காவல் துறையினர், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.