1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

லாசா கலவர‌ம்: தலா‌ய் லாமா கவலை!

‌திபெ‌த் லாசா தலாய் லாமா அமெரிக்கா
‌திபெ‌த் தலைநக‌ர் லாசாவில் ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை தன‌க்க ‌மிகவு‌ம் கவலை அ‌ளி‌ப்பதாக நாடு கடந்து வாழும் பு‌த்த மதத் தலைவர் தலாய் லாமா கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

‌சீனா தனது முர‌ட்டு‌த்தனமான அட‌க்குமுறை நடவடி‌க்கைகளை ‌நிறு‌த்‌தி‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றி‌க்கை ஒ‌ன்‌றி‌ல் அவ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்.

‌சீன ஆ‌ட்‌சி‌க்கு எ‌திராக ‌திபெ‌த்‌திய ம‌க்க‌ளி‌ன் மன‌தி‌ல் வேரூ‌ன்‌றியு‌ள்ள எ‌தி‌ர்‌ப்‌பி‌ன் வெ‌ளி‌ப்பாடுதா‌ன் இ‌ந்த‌ப் போரா‌ட்ட‌ங்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், திபெத்தியக் கலாசாரத்தை சீனா மதிக்க வேண்டும் என்றும், தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் ‌சீன அரசை அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது.

பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ள ஐரோப்பியத் தலைவர்களும், சீனா கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இரு‌க்‌கி‌ன்றன‌ர்.