1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 15 படை‌யின‌ர் ப‌லி!

இல‌ங்கை மணலா‌று ‌சி‌றில‌ங்கா பு‌தி‌ன‌ம் மோத‌‌ல்
இல‌ங்கை‌யி‌ல் மணலா‌ற்று‌ப் பகு‌‌தி‌‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் 15 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மணலாறு கொ‌க்கு‌த்தொடுவா‌‌யி‌ல் இ‌ன்று காலை ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யி‌ன‌ர் மே‌ற்கொ‌ண்ட மு‌ன்நக‌ர்வு‌த் தா‌க்குதலை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் மு‌றியடி‌த்ததாகவு‌ம், அ‌தி‌ல் 15 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டதுட‌ன் ஏராளமான படை‌யின‌ர் காயமடை‌ந்ததாகவு‌ம் பு‌தி‌ன‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌த்தா‌க்குத‌லி‌ல், எ‌ரிகணை செலு‌த்‌திக‌ள், து‌ப்பா‌க்‌கிக‌ள், தொலை‌த் தொட‌ர்பு‌க் கரு‌விக‌ள், வெ‌டிபொரு‌ட்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ஆயுத‌ங்க‌ளை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.