1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இந்தியாவின் அணுகுமுறை தமிழின அழிப்பிற்கே வழிகோலும் : விடுதலைப் பு‌லிக‌ள்!

இந்தியா தமிழர் பிரச்சனை சர‌த் பொ‌ன்சேகா‌ ‌சி‌றில‌ங்கா த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
"தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் நடவடி‌க்கைக‌ள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்" எ‌ன்று த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா‌வி‌ற்கு இ‌ந்‌திய அரசு வழ‌ங்‌கியு‌ள்ள வரவே‌ற்பு‌க்கு‌க் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து அ‌‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன் சா‌ர்‌பி‌ல் ‌நே‌ற்று விடு‌க்க‌ப்ப‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌‌ல் இ‌வ்வாறு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌றி‌க்கை‌யி‌ன் முழு ‌விவர‌ம் வருமாறு :

ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று ம‌ரியாதை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்காலச் சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரசு ம‌ரியாதையை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை விடுதலைப் புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இராணுவ வழித் தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.

ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும்போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.

சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணை போகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத் தமிழர்களைத் தொடர்ந்து இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.

நா‌ங்க‌ள் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எ‌ங்க‌ளி‌ன் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரையே நடத்தி வருகிறோம்.

நா‌ங்க‌ள் இன்னமும் நார்வேயின் தலைமையிலான அமைதி வழி முயற்சிகளிலிருந்து விலகவில்லை. நார்வே அரசின் தலைமையில் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் அமை‌தி முயற்சிகளில் பங்கேற்க விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கிறது.

இந்த நிலையில், அரசியல்-இராணுவ- பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு தோ‌ள் கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

"புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை" என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு ஒ‌த்துழை‌ப்பு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயலையே வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் இத்தகைய நடவடி‌க்கைகளா‌ல் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப்போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்”.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.