1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3 பா‌க். ‌வீ‌ர‌ர்க‌ள் ப‌லி!

வடமே‌ற்கு‌ பா‌கி‌ஸ்தா‌‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌தி‌ பஜாவு‌ர்
வடமே‌ற்கு‌ப் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌தி‌யி‌ல் ராணுவ வாகன‌ங்களை‌க் கு‌றிவை‌த்து நட‌‌த்த‌ப்ப‌ட்ட கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் ராணுவ அ‌திகா‌ரி ஒருவ‌ர் உ‌ட்பட 3 ராணுவ‌த்‌தின‌‌ர் ப‌லியா‌யின‌ர்.

ஆ‌ஃ‌ப்க‌‌ன் எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள பஜாவு‌ர் நகர‌த்‌தி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட இ‌த்தா‌க்குத‌லி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட வெடிகு‌ண்டு தொலை இய‌க்கு முறை‌யி‌ல் வெடி‌க்க‌ச் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இத‌‌ற்கு எ‌ந்த அமை‌ப்பு‌ம் பொறு‌ப்பே‌ற்காத ‌நிலை‌யி‌ல், தா‌க்குத‌ல் நட‌ந்த பகு‌தி‌யி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌த் தேடுத‌ல் வே‌ட்டை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.