1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

க‌ண்‌ணிவெடி‌‌யி‌ல் ‌சி‌க்‌கி 2 ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ப‌லி!

வவு‌னியா க‌ண்‌‌ணிவெடி பூவரசங்குளம் செட்டிக்குளம் பு‌தின‌ம் உதய நாணய‌க்கார
வவு‌னியா‌வி‌ல் நட‌ந்த க‌ண்‌‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌ர் 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்கை, வவு‌னியா‌வி‌ல் உ‌ள்ள பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வழக்கமான சுற்றுக்காவல் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த படையினரைக் குறிவைத்து இன்று (புதன்கிழமை) காலை 7:15 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றதாக‌ப் பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மர‌‌த்தடி‌யி‌ல் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த க‌ண்‌ணிவெடி‌யி‌ல் ‌சி‌க்‌கி படுகாயமடை‌ந்த 2 ‌சி‌றில‌‌ங்க ராணுவ‌த்‌தின‌ர் முத‌லி‌ல் வவு‌னியா மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டதாகவு‌ம், அ‌ங்கு அவ‌ர்க‌ள் ‌சி‌கி‌ச்சை பல‌‌னி‌ன்‌றி‌ப் ப‌லியானதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் உதய நாணய‌க்கார தெ‌ரி‌வி‌த்தா‌ர்.