1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தி‌ல் பு‌திய படை‌ப்‌பி‌ரிவு!

சி‌றில‌ங்கா ராணுவ‌ம் பு‌தின‌ம் இணையதள‌ச் செ‌ய்‌தி 30
சி‌றில‌ங்கா ராணுவ‌ம் தனது ப‌டை பல‌த்தை அ‌திக‌ரி‌க்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் ஒரு பு‌திய படை‌ப்‌பி‌ரிவை உருவா‌க்க‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாக பு‌தின‌ம் இணையதள‌ச் செ‌ய்‌தி கூறு‌கிறது.

‌சி‌றில‌ங்கா ராணுவ வ‌ட்டார‌ங்களை மே‌ற்கோ‌ள்கா‌ட்டி வெ‌ளியா‌கியு‌ள்ள அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல், "இல‌ங்கை‌யி‌ல் த‌ற்போது நட‌ந்து வரு‌ம் போ‌ரி‌ல் ராணுவ‌த்‌தி‌ன் பல‌த்தை மேலு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் பு‌திதாக 61 வது படை‌ப்‌பி‌ரிவை உருவா‌க்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அத‌ற்கான ப‌யி‌ற்‌சிக‌ள் த‌ற்போது நட‌ந்து வரு‌கி‌ன்றன. இரு‌ந்தாலு‌ம், இ‌‌ந்த‌ப் படை‌ப்‌பி‌ரி‌வி‌ன் க‌ட்டளை‌த் தளப‌தி, தலைமையக‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ‌விவர‌ங்க‌ள் இதுவரை முடிவு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், "ராணுவத்தினருக்கு மேலும் படையினரைச் சேர்க்கும் முயற்சிகளும் நட‌ந்து வருகின்றன. கடந்த வருடம் 30,000 சிங்கள இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர். இந்த வருடம் மேலும் 15,000 பேரை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது" எ‌ன்று‌ம் அ‌ச்செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.